விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும் All Things Are Possible To Them That Believe 53-02-18 டல்லாஹஸ்ஸி, புளோரிடா, அமெரிக்கா சகோதரன் பாக்ஸ்டர், பில்லிக்கு நீங்கள் உதவ வேண்டுமென அவன் விரும்புகிறான், அல்லது உங்களில் சிலர் இங்கே வாருங்கள். எல்லாம் சரி. J-35 முதல் 50 வரை. முதலில் அதை நாம் முயற்சிப்போம். இப்பொழுது யாரேனும் உங்களுடைய அட்டைகளை திருப்புங்கள்; உங்கள் அட்டையின் மறுபக்கத்தை பாருங்கள். இப்பொழுது, உங்களுக்கு பக்கத்திலிருப்பவருடைய அட்டையை பாருங்கள்; ஒருவேளை அவர்கள் செவிடாகவோ கேட்க முடியாதவர்களாகவோ இருக்கலாம். காது கேட்காததால் அவர்களால் எழுந்து நிற்க முடியாது. தங்களுடைய எண்ணை அவர்களால் கேட்க -- கேட்க முடியாது. எனவே நீங்கள் அதை செய்ய நாங்கள் விரும்புகிறோம்... அல்லது யாருக்காவது நகர்ந்து செல்ல முடியாமல் இருந்தால் அவர்கள் ஒரு எண்ணை அழைக்கும் போது, உங்கள் கையை மட்டும் உயர்த்துங்கள். அது பரவாயில்லை. உங்கள் கையை மட்டும் உயர்த்துங்கள் - யாரேனும் உங்களை அழைத்து வரும்படி, எங்களிடம் இங்கே மேலே அழைத்து வரும்படி நாங்கள் ஏற்பாடு செய்வோம். அவர்கள் ஜனங்களை ஒழுங்கு செய்யும் போது, நாம் அனைவரும் அதை பாடுவோம். இப்பொழுது, நாம் அதிக நேரம் எடுக்கப்போவதில்லை. நாம் ஜெபத்தில் தரித்திருப்போம். எல்லாம் சரி, எல்லாம் சரி, எல்லாம் சரி. நம்பிடுவாய்... கைக்கூடிடும், நம்பிடுவாய், நம்பிடுவாய்... யாவும் கைக்கூடிடும், நம்பிடுவாய். 2. ஒரு கதகதப்பான ஒரு ஏப்ரல் காலை வேளையில், அன்பான ஒருவர் சால்வையை தன் மீது போர்த்திக்கொண்டு, மலையிலிருந்து கீழே இறங்கி வருவதை, அவருடைய தலைமுடி ஓரமாக பறப்பதை நாம் கற்பனை செய்வோம். அவரோடு மூன்று மனிதர் நடந்து வந்தனர். ஒரு தகப்பன் வலிப்பு நோயுடைய தன் மகனோடு வந்திருந்தான். அவன், “ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும். அவன் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறான். அடிக்கடி தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான், பிசாசு அவனைக் கொல்ல முயற்சிக்கிறான்” என்றான். அவர் கூறினார், “நீ விசுவாசித்தால் என்னால் ஆகும். விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும் என்றார். (அது உண்மை தானே?) எல்லாம் கூடும். நீங்கள் கூறலாம், “தேவனுக்கு எல்லாம் கூடும்” என்று. உங்களுக்கும் எல்லாம் கூடும்... "விசுவாசிக்கிறவர்களுக்கு”. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? எல்லாம் சரி. நாம் – நாம் மீண்டும் பாடுவோம். நம்பிடுவாய், நம்பிடுவாய் யாவும் கைக்கூடிடும், நம்பிடுவாய், நம்பிடுவாய், நம்பிடுவாய் யாவும் கைக்கூடிடும், நம்பிடுவாய் 3. இப்பொழுது, கிறிஸ்தவ நண்பர்களே, உங்களிடம் நான் ஒன்றைக் கேட்கப் போகிறேன் அதை நீங்கள் எனக்காக செய்வீர்களா, இப்பொழுது. நான் மிகவும் பயபக்தியாய் இருக்க விரும்புகிறேன். இப்பொழுது, நம்முடைய கர்த்தர் எதையாகிலும் செய்ய வேண்டும் என்றால், அப்பொழுது அவரை நீங்கள் ஸ்தோத்தரியுங்கள். ஆனால் அந்தவிதமாக... பாருங்கள், அது - அது கடினமானது. சகோதரன் பாக்ஸ்டர் அறிவார். அது உண்மை தானே, சகோதரனே, இது போன்று இருக்கும் இடத்தில் அது அரிதானதே? அதாவது எல்லா இடங்களிலும் ஆவிகள் சூழ்ந்து இருக்கின்றது. வியாதிப்பட்ட ஜனங்கள் இருக்கின்றனர். மனிதர்களாக இருப்பதால், ஒவ்வொரு நபரையும் ஒரு ஆவி பிடித்திருக்கிறது. அந்த ஆவிகள், ஒன்று இப்படியும் இன்னொன்று அப்படியுமாக நகர்கிறது, நீங்கள் அதை பார்க்கப் போகிறீகள். அது வெளியே சென்று அவரை சந்திக்கும், இங்கேயும் மற்ற எல்லா இடங்களிலும் சென்று ஜனங்களை அழைத்து, அவர்கள் இருக்கும் நிலையில் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று கூறும். (உங்களுக்கு புரிகிறதா-?) இப்பொழுது, இயேசு இங்கே இருந்தால், உங்கள் அவிசுவாசம் சுகமளித்தலுக்காக செய்து முடித்ததைக் காட்டிலும் வேறு... திலே அவரால் உங்களை சுகமாக்க முடியுமா?. ஏற்கனவே உங்கள் சுகமாக்கும்படி எந்தவொன்றும் என்னிடம் என்னிடம் இல்லை. எதையாவது செய்ய முடியுமா-? ஒன்றையும் செய்ய முடியாது. உங்களை... ஒன்றுமே இல்லை. சகோதரன் ஜாக்சன், வியாதியஸ்தருக்காக அவரும் அதிகமாக ஜெபித்தார், உங்களால் ஒன்றையும் சுகமாக்க முடியாது, எதையும் சுகமாக்க முடியுமா, சகோதரன் ஜாக்சன் அவர்களே-? ஒன்றையும் சுகமாக்க முடியாது. வியாதியஸ்தர்களுக்காக மாக்க முடியாது... உங்களால் செய்ய முடிந்த ஒரே காரியம் அது ஜெபித்த ஊழியக்காரர்களே, உங்களில் யாராலும், ஒன்றையும் இயேசுவை, அவர்களை ஏற்கனவே அவர் எங்கே சுகப்படுத்தினார் என்பதை அவர்களுக்கு சுட்டிக்காட்டுவதே.. பாருங்கள்-? அவர் அவர்களை சுகப்படுத்திவிட்டார். இப்பொழுது, யாராலும்... என்ன... இங்கிருக்கும் எந்த ஊழியக்காரராலும், நாங்கள் உங்களை இரட்சித்தோம் என்று கூற முடியாது. அவர்களால் உங்களை இரட்சிக்க முடியாது, ஆனால் 1900-ஆண்டுகளுக்கு முன்பு கல்வாரியில் வாங்கப்பட்ட உங்கள் இரட்சிப்பை சுட்டிக் காட்ட முடியும். நீங்கள் அதை வெறுமனே ஏற்றுக் கொள்ளுங்கள். அவர் இரட்சிப்புக்காக கல்வாரியில் மரித்த போது, மரித்த போது அவர் அதை பிதாவிடம் செலுத்தினார், அது உண்மை தானே-? அது – அது அதை செலுத்தியது. முழு உலகத்தின் பாவமும் மன்னிக்கப்பட்டது; ஆனால் இன்றிரவு அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் வரையில் அது உங்களுக்கு எந்த நன்மையையும் செய்யாது. அப்படியானால் நாங்கள், ஊழியக்காரர்கள், வார்த்தையை பிரசங்கிக்கிறோம். விசுவாசம் கேள்வியினால் வரும், எதைக் கேட்பதனால் வரும்-? தேவனுடைய வார்த்தையை. பின்பு, அவை எல்லாவற்றிற்கும் பிறகு, அதுவே போதுமானதாக இருக்க வேண்டும், ஆம் தானே-? ஆனால் அவை எல்லாவற்றிற்கும் பிறகு, தேவன் கீழே இறங்கி வந்து சபைக்கு வரங்களை கொடுத்தார். 4. இன்றிரவு ஒரு உதாரணத்துக்காக, ஒரு வேளை அங்கே அமர்ந்திருக்கும் அந்த சீமாட்டி அந்நிய பாஷை பேசலாம், இங்கே இருக்கும் இந்த மனிதன் அதற்கு விளக்கம் அளிக்கலாம் அதாவது இங்கே சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் இந்த சீமாட்டியிடம் கூறலாம், அதாவது அவள் ஒரு குறிப்பிட்ட காரியத்தை செய்தால் என்றும் அது தான் இந்த வியாதிக்கு காரணம் அல்லது அவளிடம் என்ன தவறு இருக்கிறது என்று கூறலாம் அல்லது இந்த மனிதனிடம் என்ன தவறு இருக்கிறது என்று கூறலாம். அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அது கச்சிதமாக அப்படியே இருக்கும். என்ன நடக்க போகிறதோ அதைக் கூறும். அது தேவனுடைய வரம் என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? அது சரி. பின்பு அவர் திரும்ப அனுப்பினார், பின்பு அவர் அனுப்பினார். அவர் தீர்க்கதரிசிகளை அனுப்பினார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? அவர் ஞானத்தை அறிவை, அந்நிய பாஷையின் வரத்தை, அந்நிய பாஷையை விளக்குவதை அனுப்பினார். இந்த காரியங்கள் எல்லாம் சரீரத்திலிருக்கிறது எல்லாம் சரீரத்திலிருக்கிறது. இப்பொழுது, அவர் செய்திருந்தால் - தன்னுடைய வார்த்தைக்குப் பிறகு, வார்த்தையில் இன்னுமாக அவிசுவாசம் இருக்கும் என்பதை அறிந்து, கேள்விக்குறி இருக்கும் என்பதை அறிந்து, அவர் இங்கே கீழே இறங்கி வந்து, வேறெதையோ வைத்து, அதை மேலே கொண்டு வரும்படி, அவர் எவ்வளவு கவனமாய் இருந்தார் பாருங்கள். அதாவது அவர் அன்பானவர் அல்லவா-? என்னே, அவர் எவ்வளவு அருமையானவர். 5. இப்பொழுது, அவர் இங்கே இருந்தால் ஒரு வேளை உங்களிடம் என்ன தவறு இருக்கிறதென்று அவர் கூறலாம். உங்களுடைய நிலையை கூறலாம். என்ன செய்வதென்று கூறலாம். ஆனால் அவரால் உங்களை சுகப்படுத்த முடியாது. அவரே இங்கே இந்த சூட் அணிந்து நின்றிருந்தாலும், அவரால் உங்களை சுகமாக்க முடியாது. 'ஏனெனில் அவர் அதை ஏற்கனவே செய்து முடித்து விட்டார். நல்லது, அவரால் அதை இரண்டாம் தரம் செய்ய முடியாது அவர் கூறுவார். "நான் தான் கிறிஸ்து. உன்னுடைய இரட்சிப்பை நான் முன்னமே சம்பாதித்து விட்டேன். இதை விசுவாசிக்கிறாயா?" என்பார். ஆம். கர்த்தாவே, நான் அதை விசுவாசிக்கிறேன்" என்று நீங்கள் கூறினால் அது முடித்து விட்டது. நல்லது. அவருடைய இந்த வார்த்தையும் அதே காரியத்தைத்தான் கூறுகிறது. அவருடைய வார்த்தையை காட்டிலும் அவர் மேலானவரல்ல. அது சரிதானே-? எல்லாம் சரி. 6. ஓ அதற்காக நம்மிடம் ஒரு சிறு பெண் இருக்கிறாள். நல்லது, அது மிகவும் இனிமையானது. எல்லாம் சரி. அவளை இங்கே அமரவையுங்கள். அவள் பின்னாக இருக்கிறாள் பாருங்கள். ஆம் அவளை சரியாக இங்கே அமர வையுங்கள். சகோதரனே. உங்களுக்கு வேண்டுமானால் அவளோடு நீங்களும் நிற்கலாம். போய் நில்லுங்கள்.... அக்குழந்தை-? நல்லது, அது பரவாயில்லை. உன்னுடைய பெயர் என்ன-?.... ஓ. என் சகோதரனே, உங்களுடைய அறிமுகத்தால் நான் மகிழ்கிறேன். நீங்கள் தான் அந்த பிள்ளையின் தகப்பனா. ஆம் தானே-? எல்லாம் சரி, ஐயா, இப்பொழுது, பிள்ளையோடு பேசுவதை விட நான் உங்களோடு பேசுகிறேன், ‘ஏனெனில் அவள் ஒரு குழந்தையாயிருக்கிறாள். முதன் முறையாக இப்பொழுது தான் நாம் சந்திக்கிறோம் என்று நான் நம்புகிறேன். எனக்கு தெரிந்த வரையில், நான் - நான் உங்களை என் ஜீவியத்தில் ஒரு போதும் கண்டதே இல்லை. இப்பொழுது தான் நாம் முதன் முறையாக சந்திக்கிறோம். இப்பொழுது, ஒழுங்கின்படி நான் உங்களுடன் ஒரு நிமிடம் பேச வேண்டும்... பாருங்கள்-? உங்களைச் சுற்றி எல்லா இடங்களிலும் பாருங்கள்: எல்லா இடங்களிலும் ஆவிகள் இருக்கிறது. பாருங்கள்-? மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது, அது தரிசனமாயிருக்க வேண்டும், தனிப்பட்ட விதமாக. நினைவில் கொள்ளுங்கள். சில நேரங்களில் நம்முடைய கர்த்தராகிய இயேசு ஜனங்களை ஒரு பக்கமாக அழைத்து சென்று, அவர்களோடு பேசினார், அங்கே அழைத்து சென்றார், அதை ஒரு காரணத்திற்காக செய்தார், அவர்களின் ஆவியை தொடர்பு கொள்வதற்காக அப்படி செய்தார் என்பதை நீங்கள் பார்க்கிறீர்களா. இப்பொழுது, கர்த்தருடைய தூதன் வந்து அந்த காரியங்களை குறித்து, நான் என்ன செய்ய வேண்டுமென்று என்னிடம் கூறியதை பற்றின செய்தியை நீங்கள் எப்பொழுதாவது கேள்விப்பட்டதுண்டா-? அது சத்தியம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? நல்லது, நீங்கள் என்னை விசுவாசிக்கும்படி நான் செய்து, பின்பு நான் ஜெபிக்கும் போது உத்தமமாக இருந்தால், அது நடைபெறும் என்று அவர் கூறியிருந்தால். இப்பொழுது, என்னால் இந்த சிறு பெண்ணை சுகமாக்க முடியாது என்பது உங்களுக்கு தெரியும். அவளை சுகமாக்கும்படி என்னிடம் ஒன்றுமே இல்லை. நான் - நான் ஒரு மருத்துவருமல்ல. நான் ஒரு மருத்துவராய் இருந்தாலும், என்னால் – என்னால் அவளை சுகமாக்க முடியாது. இயற்கைக்கு நான் கொஞ்சம் உதவி செய்யலாம். ஆனால் என்னால் முடியாது... தேவன் தான் சுகமளிக்க முடியும். அவர் ஏற்கனவே சுகமாக்கி விட்டார், அதை நம்புவதற்கு நம்முடைய விசுவாசம் தேவையாயிருக்கிறது (பாருங்கள்-?) அது சரி. 7. ஆனால் இப்பொழுது, நம்முடைய கர்த்தர் இங்கே இருந்திருந்தால், இந்த சிறு பெண் வியாதியாய் இருப்பதை, ஒரு சிறிய, இனிமையான ஒருவள் அப்படி வியாதியாயிருப்பதை நான் உணரும் விதமாகவே, இவளை போன்றே என் வீட்டிலும் ஒருத்தி இருக்கிறாள். என் இதயம் எப்படியாய் துடிக்கும் என்று உங்களுக்கு தெரியும். ஆனால் அவர் இங்கே இருந்தால், அவர் நின்று ஒரு வேளை இதே போன்றே உங்களிடம் பேசியிருப்பார். அவர் உங்களிடம் கூறுவார்... “நல்லது, உன் பிள்ளைக்கு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட ஜூரம் வந்தது அல்லது அது எதுவாக இருந்தாலும் மேலும் மேலும் – அவள் பல நாள் வியாதியாய் இருக்கிறாள் அல்லது அது போன்று ஏதோவொன்றை கூறுவார்”. நல்லது, அது உங்களை இவ்வாறாக சொல்லவைக்கும், “ஆம், அது அவர் தான் என்பதை நான் அறிவேன், ஏனெனில் பிள்ளையிடம் அது தான் பிரச்சனை” என்று. அதன் பின்பு அவர் உங்களைப் பற்றி ஏதோ ஓன்றை கூறலாம், நீங்கள் என்ன செய்தீர்களென்று அல்லது ஜூரம் வர காரணமாயிருந்த ஒன்றை அல்லது பிள்ளையின் மேல் வியாதி வர காரணமாயிருந்ததை. அப்பொழுது நீங்கள், “அது அவர் தான்” என்று கூறினால், பின்பு ... ஏன், அவர் கூறுவார்... அவர் பிள்ளையின் மீது கைகளை வைத்து, கூறுவார், "நீ விசுவாசிக்கிறாயா-?" என்று. நீங்கள், “ஆம், ஐயா” என்று கூறுவீர்கள். பின்பு அவர் சென்ற பிறகு அப்பொழுது நீங்கள் குழந்தை சுகமாகிவிடும் என்று விசுவாசிப்பீர்கள், ஆம் தானே-? நல்லது இப்பொழுது, அவர் சென்று பிதாவின் வலது பாரிசத்தில் இருக்கிறார். ஆனால் அவர் தன்னுடைய வரத்தை திரும்ப அனுப்பியிருக்கிறார். அவருடைய வரம் பரிசுத்த ஆவியாயிருக்கிறது. பரிசுத்த ஆவியிடம் வரங்களின் தன்மைகள் இருக்கிறது, அவை ஜனங்களிடம் வருகிறது. இப்பொழுது, அவர் இங்கே இருந்து. இந்த காரியங்களுக்கு நான் உண்மையான சாட்சி கூறி இருந்தால், அப்பொழுது அவர் தன்னைத்தானே அதே விதமாக இங்கே பிரத்தியட்சம் ஆக்குவார், அதாவது அவர் தன்னுடைய சொந்த சரீரத்தில் பிரத்தியட்சம் ஆனது போன்றே தன்னுடைய ஊழியக்காரன் மூலமும் பிரத்தியட்சமாவார். அது உண்மை தானே-? 8. ஐயா, நீங்கள் ஒரு உத்தமமான விசுவாசி என்று நான் நம்புகிறேன். நீங்களே முழுவதுமாக நன்றாக இல்லை. உங்களுக்கே அது தெரியும். ஆம், ஐயா. மேலும்... ஆனால் இங்கே இருக்கும் உங்கள் குழந்தைக்கு, அது - அது ஜுரமில்லை. குழந்தைக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அது உண்மைதானே-? குழந்தை விழுந்ததா-? ஏதோ கீழே விழுந்ததைப் போன்று -? மேலும், ஓ, அது ஒரு... சிறிய ஏதோ ஓன்று - ஏதோவொன்று குத்தியது - அதின் மலக்குடலுக்குள் ஏதோவொன்று-? அது உண்மைதானே-? அதினால் எல்லா விதமான தன்மைகளும் இருக்கிறது; அதினால் கசிவுகள் இருக்கிறது. அது சரிதானே-? உங்களுக்கு ஆண் சுரப்பியில் பிரச்சனையிருக்கிறது. அது உண்மைதானே, என் சகோதரனே-? ஒரு நிமிடம் நாம் நம் தலைகளை தாழ்த்துவோம். எங்கள் பரலோக பிதாவே, இயேசுவை மரித்தோரிலிருந்து மீண்டுமாக எழுப்பினவரே, உம்முடைய ஆவி இங்கேயிருக்கிறது. இந்த சிறிய குத்தப்பட்ட, அழகிய சிறு பிள்ளை, விபத்தினால் தன்னுடைய சிறிய சரீரம் துளையிடப்பட்டவளாய் இங்கே இருக்கிறாள். ஆனால் நீர் தேவனாயிருக்கிறீர். உம் ஒருவரால் மட்டுமே அதை சுகமாக்க முடியும். இப்பொழுது, ஊழியத்தின் மூலம் பிரசங்கிக்கும்படி நீர் என்ன கூறினீரோ அதன்படி, கைகளை பிள்ளையின் மீது வைக்கும் போது, பிள்ளையை நீர் சுகமாக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன், மேலும் கர்த்தாவே, பிள்ளையை நீர் சுகமாக்கும்படி நான் கேட்கிறேன். பிள்ளை இங்கேயிருந்து சென்று, ஆரோக்கியமான பிள்ளையாக இருக்கட்டும். நான், இப்பொழுது உம்முடைய ஊழியக்காரனாக, பிதாவே, இப்பொழுது பிசாசின் எல்லா ஆவிகள் மீதும் நான் அதிகார வரம்பை எடுத்துக் கொள்கிறேன். தேவனுடைய ஊழியக்காரனாக, என்னுடைய கர்த்தரின் நாமத்தினால் கைகளை வைத்து, அவருடைய நாமத்தால் கேட்கிறேன், இந்த பிள்ளை இந்த வேதனையிலிருந்து எந்தவித பாதிப்பும் இல்லாமல் விடுதலையாகட்டும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். தேவன் உன்னை ஆசிர்வதிப்பார்...? 9. இப்பொழுது போகலாம். இங்கே ஒரு நிமிடம் பாருங்கள். இப்பொழுது, அது - அது - அது சரியாயிருக்கிறது. எல்லாம் சரி, சில நேரங்களில் ஏதோவொன்று ஏதோவொன்று பிள்ளைக்கு நடக்கின்றது ஆனால் அது என்னவென்று என்னால் சரியாக நினைவுக்கூற முடியவில்லை. ஆனால் கூறப்பட்டது எல்லாமே உண்மை-? ஒவ்வொரு புள்ளியும் உண்மை. ஒவ்வொரு புள்ளியும். உண்மை இப்பொழுது, இடத்திற்கு அவர் கூறினார், "ஜனங்களை உன்னை விசுவாசிக்கும்படி செய்தால், உத்தமமாயிருந்தால், உன் ஜெபத்திற்கு முன்பு ஒன்றுமே நிற்காது. இப்பொழுது. அவர் கூறினார்... நான் கூறினேன், “எனக்கு கல்வியறிவு இல்லாததால் அவர்கள் என்னை விசுவாசிக்க மாட்டார்கள்” என்றேன். அவர் கூறினார், “மோசேக்கு இரண்டு அடையாளங்கள் கொடுக்கப்பட்டது போல அதாவது அவன் இந்த நோக்கத்திற்காகத் தான் அனுப்பப்பட்டான் என்பதை உறுதிப்படுத்த அவனுக்கு கொடுக்கப்பட்டது போல, உனக்கும் கொடுக்கப்படும்" என்றார். என்னிடம் இந்த காரியத்தை கூறினார், “இருதயத்தின் இரகசியத்தை நீ அறிந்து, ஜனங்களிடம் அவர்களின் பிரச்சனைகளை கூறுவாய், கடந்து சென்ற நாட்களில் இருந்த ஆவியை போன்றே” அதைப் பார்க்க எனக்கு கடினமாயிருந்தது. ஆனால் இப்பொழுது எனக்கு புரிகிறது. இப்பொழுது, பயப்படாதே, உன்னுடைய குழந்தை சரியாகி விடுவாள். தேவன் செய்வார்...?... நீ பயப்படாதே. இப்பொழுது, ஜீவியத்தில் கடந்த காலத்தில் நடந்ததை அவ்விதமாக பார்க்க பரலோகத்தின் தேவன் என்னை அனுமதிப்பாரானால், மேலும் அது தான் உண்மை, அது உண்மை என்பதை நீ அறிவாய், உன் குழந்தை சரியாகி விடுவாள் என்று நான் கூறுவேனானால், நீ போகும் பாதையில் போய்க் கொண்டே இரு. அது உண்மையாக இருந்தது போல இதுவும் உண்மை, அது சரி தானே? தேவன் உன்னை ஆசிர்வதிப்பார், ஆனபடியால் குழந்தையை கொண்டு செல். மிகவும் பதட்டமாக இருக்கிறீர்கள். ஆம் தானே-? நீ அவளை பிடித்துக் கொள்ள முயற்சித்த போது. அவளை நான் பார்த்தேன், அவள் கத்திக் கொண்டும் அப்படியாக செய்துகொண்டும் இருந்தால் இப்பொழுது, கவலைபடாதே. அது இப்பொழுது உன்னை விட்டு போக போகிறது. போகலாம். தேவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே மேலும் விசுவாசியுங்கள். அத்துடன், உன்னுடைய பிரச்சனையும் போய் விட்டது. "தேவனுக்கு நன்றி” என்று நாம் கூறுவோமாக. இப்பொழுது, நான் அந்த குழந்தையை சுகப்படுத்தினேனா-? இல்லை, ஐயா. அந்த மனிதனுக்கு தேவனில் இருந்த விசுவாசம் அந்தக் குழந்தையை சுகப்படுத்தியது. பாருங்கள்-? தேவன் தன்னுடைய ஆசீர்வாதங்களை உச்சரிக்கிறார், அது உச்சரித்தபடியே இருக்கும். பாருங்கள்-? பாருங்கள்-? 10. இப்பொழுது, வாலிப சீமாட்டியே, இப்பொழுது உன் முழு இருதயத்தோடும் நீ விசுவாசிக்கிறாயா-? இப்பொழுது, இப்பொழுது, ஏதோவொன்று நடந்துக் கொண்டிருப்பதை நீ உணருகிறாயா. பாருங்கள்-? அவள் தான் முதல் நோயாளி. அது இப்பொழுது தான் அளித்தது அந்த - அந்த அபிஷேகத்தை. அவர்கள் இங்கே வைத்திருக்கும் அந்தக் கர்த்தருடைய தூதனின் புகைப்படத்தை நீ எப்பொழுதாவது பார்த்திருக்கிறாயா-? அது ஹூஸ்டன், டெக்சாசில் எடுக்கப்பட்டது. நீ அதை ஒரு போதும் பார்த்ததே இல்லையா. இன்னும் சில இரவுகளில் அவர்கள் அதை இங்கே கொண்டு வருவார்கள்...?... அதிகமாக. ஆனால் அது-? இப்பொழுது உணருகிறாயா. அதுதான் அது அது அவருடைய பிரசன்னம். இப்பொழுது, ஒரு நிமிடம். முன்பு ...-? சீமாட்டியே, நீ ஒரு விதமான வலிப்பினால் பாதிக்கபட்டிருக்கிறாய், நீ உள்ளே போகிறாய்: அது வலிப்பு வியாதி. அது சரிதானே-? அது ஒரு கொடூரமான காரியம். அந்த கருப்பானக் காரியம் நமக்கு இடையே வருவதை நான் காண்கிறேன், அது அது தான் என்று நான் அறிவேன். எல்லாம் சரி, நீங்கள் எல்லாரும் எல்லா விடங்களிலும் இருப்பவர்களும் உங்கள் தலைகளை தாழ்த்துங்கள்...-?... ஒரு கண்ணாடி. இப்பொழுது இந்த ஒரு காரியம் அது அதிகமாக தொந்தரவு செய்கிறது: வலிப்பு வியாதி. 11. இப்பொழுது, தயவு செய்து, சீமாட்டிகளே, ஒவ்வொருவரும், உங்கள் குழந்தைகளை பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள், ஒவ்வொருவரும் விசுவாசத்தோடு இருங்கள். இப்பொழுது, சீமாட்டியே, என் சகோதரியே, என்னால் முடியவில்லை - உனக்கு உதவி செய்ய என்னால் முடியவில்லை, உனக்காக ஜெபிப்பதை தவிர என்னால் வேறேதும் செய்ய முடியவில்லை. நீ என்னை விசுவாசிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். கர்த்தராகிய இயேசுவே, இந்த பெண்ணிற்கு உதவி செய்யும். நீர் அதை அருளும்படி நான் ஜெபிக்கிறேன். இன்றிரவு இங்கிருந்து இவள் செல்லும் போது சுகமாகட்டும். அதை அருளும், கர்த்தாவே. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தால் நான் என் கைகளை இவள் மீது வைத்து, இவளின் சுகமளித்தலுக்காக கேட்கிறேன். ஓ, நித்திய தேவனே, ஜீவனின் ஆக்கியோனே, உம்முடைய ஊழியக்காரனின் ஜெபத்தை கேளும். உம்முடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்தவனாய், இவளின் மீது என் கைகளை வைத்து, வலிப்பு பிசாசு இவளை விட்டு போகும்படி கேட்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் அது போகட்டும். அது போகும்படி அருள் செய்யும், இயேசுவின் நாமத்தில் ஆமென். இப்பொழுது, ஒரு நிமிடம், தயவு செய்து. உங்களிடம் நான் ஒரு நிமிடம் பேச வேண்டும். உங்களால் முடிந்தால் ஒரு நிமிடம் நீங்கள் என்னை பார்க்க வேண்டுமென நான் விரும்புகிறேன். இப்பொழுது, அது நீண்ட நாளாக இருந்தது, ஆம் தானே-? உங்களை நான் ஒரு நிமிடம் பார்க்க விரும்புகிறேன். உங்களிடம் பேச வேண்டும். நான் உங்கள் மனதை படிக்கவில்லை. நான் - நான் அது - அதை தேவன் அறிவார். ஆனால் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அதை அழைக்கலாம் (பாருங்கள்-?), ஒன்று - ஒன்று இருக்கிறது... தேவனிடம் இருக்கும் ஒவ்வொன்றிற்கும் பிசாசு போலியை வைத்திருக்கிறான். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? அவனிடம் இங்கே தெருக்களில் நின்று மனதை வாசிப்பவர்கள் யூகிப்பவர்கள் அல்லது அது போன்றவர்கள் இருக்கிறார்கள். அது பிசாசு. ஆனால் இயேசு கிறிஸ்து அவர்களின் சிந்தனைகளை அறிந்தார், அது சரிதானே-? எல்லாம் சரி. அவனிடம்... தேவனிடம் இருக்கும் ஒவ்வொன்றிற்கும். அவன் ஒரு போலியை வைத்து இருக்கிறான். அவரிடம் அசலான உண்மையான பரிசுத்த ஆவியிருக்கிறது; அது போன்று இருக்கும் ஒன்றை பிசாசு வைத்திருக்கிறான், அது போல ஒன்றை ஆனால் இங்கே, உன்னிடம் என்ன பிரச்சனை இருக்கிறதென்று அது கூறினது. ஆனால் வேறு ஏதோ ஓன்றும் இருக்கிறது. உன்னுடைய ஜீவியத்தில் நீ உணர்ந்தாய், நீண்ட காலமாக, அதாவது அதில் - கிறிஸ்துவின் ஊழியத்தில் உனக்கு அழைப்பிருக்கிறது என்று, அது சரிதானே-? மேலும் இந்த காரியம் உனக்கு தடையாயிருந்தது. அது உண்மைதானே-? அதை குறித்து நீ ஜனங்களிடம் பேசு இந்த கட்டடத்தில் இருக்கும் யாருக்காவது அது உண்மை என்று தெரியுமா-? அது உண்மையென்றால், உங்களுடைய கையை உயர்த்துங்கள். இப்பொழுது, போகலாம், கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக. நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகும். தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக. 12. சீமாட்டியே, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், 'நிச்சயமாக உங்களை எனக்கு தெரியாது. என் ஜீவியத்தில் நான் உங்களை ஒரு போதும் கண்டதே இல்லை. ஆனால் தேவன் உங்களை அறிவார். அவர் அறிவார் தானே-? அவர் உண்டென்றும், அவர் தம்மை தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (எபிரெயர்-11:6) அவரால் உங்களை விடுதலையாக்க முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? அவர் இதை செய்தால், உங்கள் முழு இருதயத்தோடும் அவரை நீங்கள் தேடுவீர்களா, உங்களுடைய ஜீவியத்தை அவருக்கு கொடுப்பீர்களா, மேலும் மேலும் உங்களுடைய ஜீவியத்தின் மீதம் இருக்கும் நாட்களில் உங்களால் முடிந்த அளவுக்கு அவருக்காக சிறப்பாக ஜீவிப்பீர்களா-? அந்த நிலையில் நீங்கள் அதை செய்ய வேண்டும்; அந்த விதமாக உங்களால் அதிக நாட்கள் ஜீவிக்க முடியாது என்று உங்களுக்கு தெரியும். அது புற்று நோயாகிவிட்டால் பின்பு, நீங்கள் அவ்வளவு தான். எப்படியாயினும் அதற்காக உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அது சரிதானே-? இப்பொழுது உங்களுக்கு கட்டியிருக்கிறது. அது... ஆம், அது உண்மை, உங்கள் மார்பகத்தில். இப்பொழுது, அவர் உங்களை சுகப்படுத்தி, உங்களை குணமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களா, இப்பொழுதே உங்களுடைய ஜீவியத்தை நீங்கள் அவருக்கு கொடுப்பீர்களா. உங்களுடைய ஜீவியத்தை இப்பொழுதே அவருக்கென்றும், அவருடைய ஆசிர்வதிக்கப்பட்ட சித்தத்திற்கும் ஒப்புக்கொடுபீர்களா-? அவரை இரட்சகராகவும், ஆண்டவராகவும் மற்றும் சுகமளிப்பவராகவும் ஏற்றுக் கொண்டேன் என்று கூறுவீர்களா-? இப்பொழுதே செய்கிறீர்களா-? சாட்சிக்காக உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். இப்பொழுது, இங்கே வாருங்கள். சர்வ வல்லமையுள்ள தேவனே, ஜீவனின் ஆக்கியோனே, நன்மையான ஈவுகளை அளிப்பவரே, மெய்யாக ஆசிர்வாதங்களை அனுப்பும். கர்த்தாவே, இந்தப் பெண்ணை மன்னியும். இவள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதை அறிந்தவராய், இப்பொழுதே இவளை ஏற்றுக்கொண்டு, இவளின் சரீரத்தை சுகமாக்கும், இன்றிரவு இங்கிருந்து இவள் செல்லும் போது களிகூர்ந்தபடியே, சந்தோஷத்தோடு செல்லட்டும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன், இவள் சுகமாக்கப்பட்டு, இரட்சிக்கப்பட்டு, உம்முடைய ஆவியினால் நிரப்பபடும்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் கேட்கிறேன், ஆமென். இப்பொழுது அவரை உன் சொந்த, தனிப்பட்ட விதத்தில் சுகமளிப்பவராக, இரட்சகராக ஏற்றுக்கொள்கிறாயா? தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக. சென்று, பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டு, சுகமாகுவாயாக...?... எல்லாம் சரி. 13. சீமாட்டியே நீ விசுவாசிக்கிறாயா, எல்லாம் சரி. உன் முழு இருதயத்தோடு நீ விசுவாசித்தால், உனக்கு சுகமளித்து ஆரோக்கியமாக்க தேவன் இங்கே இருக்கிறார். நீ அதை விசுவாசிக்கிறாயா-? எல்லாம் சரி அவரில் விசுவாசமாயிருங்கள். சந்தேகிக்காதே. உங்கள் எல்லோரை பற்றியும் என்ன-? உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? தேவனில் விசுவாசமாயிருங்கள். நீங்கள் எதை கேட்கிறீர்களோ, அதை தேவன் வாய்க்கப் பண்ணுவார். இப்பொழுது, இங்கே மேடையில் இருக்கும் ஜனங்கள் மட்டுமல்ல. ஆனால் அங்கே ஜனக்கூட்டத்தில் இருப்பவர்களும், நீங்கள் எங்கே இருந்தாலும், இன்றிரவு உங்களுக்கு நான் இதை கூறுகிறேன், நீங்கள் அதோடு... ஜெப வரிசையில் இல்லாதவர்கள், ஜெப அட்டை இல்லாதவர்கள், எதுவும் இல்லாதவர்கள், வரிசையில் வர சந்தர்ப்பம் இல்லாமல் அமர்ந்து இருப்பவர்கள், நீங்கள் தேவனை விசுவசிக்க ஆரம்பியுங்கள், உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள், தேவனிடம் ஜெபித்து, அவரை ஏற்றுக் அவரை வெறுமனே ஏற்றுக் கொள்ளுங்கள். கொள்ளுங்கள். இவ்வாறாக கூறுங்கள், “கர்த்தாவே, நான் - நான் இப்பொழுது விசுவாசிக்கிறேன். இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன். நான் - நான் அதை விசுவாசிக்கிறேன், முதலாவதாக, ஏனெனில் உம்முடைய வார்த்தை அப்படி தான் கூறியிருக்கிறது. நான் அதை விசுவாசிக்கிறேன், இரண்டாவதாக, ஏனெனில் நீர் முற்றிலுமாக இன்றிரவு உம்மையே நீர் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறீர், கடந்து சென்ற நாட்களில் நீர் இருந்தது போலவே, இன்றிரவும் நீர் இங்கே இருக்கிறீர். அதை நான் என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். மேலும், நண்பர்களே, பாருங்கள். இது டெல்லாசியில் (Tallahassee) மட்டுமல்ல; இது முழு உலகத்தையும் சுற்றி வந்தது. பாருங்கள்? ஒவ்வொரு இடத்திலும், உண்மையாகவே பத்தாயிரக்கணக்கான, ஆயிரம் ஆயிரம்முறை ஆயிரக் கணக்கான ஜனங்கள் சுகமாகி, இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டனர் மேலும்..?... பாருங்கள்-? அது ஒன்றுமில்லாதது அல்ல. அது ஒவ்வொரு அக்கினி சோதனையின் ஊடாகவும் வந்தது, அதை, எல்லாவற்றையும் முன்னாக வைக்க முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன். இதோ என் மேலாளர்-? அது சரிதானே, சகோதரன் பாக்ஸ்டர்-? ஒவ்வொன்றினூடாகவும். ஒவ்வொரு முறையும் தேவனே ஜெயித்தார், ஒரு முறை கூட தோற்றதில்லை, தோற்கவும் முடியாது ஏனெனில் அது தேவன். இப்பொழுது அது நானாக இருந்தால், முன்னமே நடந்து இருக்கும்... நான் ஆரம்பிக்கும் முன்பே தோற்றவன் பாருங்கள்-? ஆனால் அவர் ஒருபோதும் தோற்பதே இல்லை. 14. ஒரு நிமிடம். சில நிமிடங்களுக்கு முன்பு ஒரு வலிப்பு நோயாளிக்காக நான் ஜெபித்தேனே. அந்த நோயாளி பெண்ணா அல்லது ஆணா-? அந்த வலிப்பு நோய்க்காக ஜெபம் செய்த பெண் எங்கே இருக்கிறாள்-? ஓ, அங்கேயா-? அது முடியவில்லை. அது மீண்டுமாக இந்த ஜனக்கூட்டத்தில் தாக்கியிருக்கிறது. அது சரியாக இங்கே இருக்கிறது. உங்களுடைய சுகமளித்தலை நீங்கள் ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா சகோதரியே-? சர்வ வல்லமையுள்ள தேவனே, இப்பொழுது நீர் இரக்கமாயிருந்து அவளை சுகமாக்க வேண்டுமென நான் ஜெபிக்கிறேன் மேலும் அவள் இந்த மணி நேரமுதல் ஆரோக்கியமாக இருப்பாளாக. சாத்தானே, அந்த பெண்ணை விட்டு போ, தேவனுடைய குமாரன் இயேசுவின் நாமத்தால், அவளை விட்டு வெளியே வா. தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. அது நடக்கலாம்...?... விசுவாசமாயிருங்கள். தேவனை விசுவாசியுங்கள்; தேவன் அதை வாய்க்கப்பண்ணுவார். பாருங்கள்-? அந்த ஆவி யாரும் பார்க்காத விதத்தில் சுற்றி திரிகிறது, முயற்சிக்கிறது...?... 15. இப்பொழுது...?... அது உண்மைதானே-? உங்களை என் ஜீவியத்தில் நான் ஒருபோதும் கண்டதே இல்லை, அது சரி தானே-? உங்களுடைய ஜீவியம் துக்கமானது...?... மிக அதிகமான ஏமாற்றத்துக்குரியது..?... சிறு பெண்ணாக இருந்தது முதல் பிரச்சனைகள். நீங்கள் ஒரு சிறு பிள்ளையாயிருந்த போது உங்களிடம் - உங்களிடம் ஒன்றிருந்தது, ஒரு சிறு பெண்ணாக இருந்த போது. பாருங்கள்-? அதுசரிதானே? ...?... அது உண்மை-? ஒரு சிறிய கட்டம் போட்ட ஆடை அணிந்திருந்தீர்கள்...?... அது உண்மைதானே-? மேலும் இப்பொழுது உங்களுக்கு ஒரு வளர்ச்சியிருக்கிறது; முதுகில் அந்த வளர்ச்சி இருக்கிறது. அது உண்மை தானே-? அந்த காரியங்களெல்லாம் உண்மையா-? அதின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. இப்பொழுது, பேசுவது நானல்ல. வேறு ஏதோவொன்று பேசுகிறது. பாருங்கள்-? நான் ஒருபோதும்... நீங்கள் ஒரு சிறுபெண்ணாக இருந்தபோது என்ன செய்தீர்கள் என்றும், எப்படியாய் நீங்கள் பள்ளிக் கூடத்தில் ஆடை அணிந்திருந்தீர்கள் என்றும், என்ன நடந்ததென்றும் எனக்கு எப்படி - எப்படி தெரியும்-? எனக்கு ஒரு போதும் - எனக்கு ஒரு போதும் அதைப்பற்றி ஒன்றுமே தெரியாது, ஆனால் அது தான் சத்தியம். கூறப்பட்ட ஒவ்வொன்றும் உறுதியான உண்மைகள். அது சரிதானே-? அது இங்கே நிற்கும் கர்த்தருடைய தூதனானவர் தான் பேசிக் கொண்டிருக்கிறார். நான் வெறுமனே... நான் என்ன பேச போகிறேன் என்பதை பற்றின கட்டுப்பாடு எனக்கில்லை. இப்பொழுது, நீங்கள் சுகமாக போகிறீர்கள்-? அவரை நீங்கள் உங்கள் சுகமளிப்பவராக ஏற்றுக்கொள்கிறீர்களா-? சர்வவல்லமையுள்ள தேவனே, இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரே, எங்களுடைய சகோதரியின் மீது நான் கைகளை வைத்து, இவள் இங்கிருந்து சென்று சுகமாயிருக்கும்படி கேட்கிறேன், உம்முடைய குமாரன், தேவனுடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தால். ஆமென். இந்த பெண்ணின் சரீரத்திலிருக்கும் வியாதி சபிக்கப்பட்டிருப்பதாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். எல்லாம் சரி, இப்பொழுது நீங்கள் போகலாம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரியே. இப்பொழுது பாருங்கள், சென்று திடமனதாயிருங்கள். உங்களுடைய சுகமளித்தலுக்காக, தேவனை ஸ்தோத்தரித்துக் கொண்டே ஆரவாரத்தோடு செல்லுங்கள், களிகூர்ந்தபடியே செல்லுங்கள். அதற்காக தேவனை விசுவாசியுங்கள். 16. சகோதரியே, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? ஒரு காலை வேளையில் நீங்கள் படுக்கையிலிருந்து நகர்ந்தபோது, உங்களால் அதை செய்ய முடியவில்லை. அந்த முதுகு அத்தகைய நிலையிலிருந்தது, அது சரி தானே? ஒரு நடைபாதையிலிருந்து கீழே இறங்குகிறீர்கள், நடைபாதையின் மீது நடக்கும் போது நீங்கள் சுலபமாக நடக்கிறீகள். அது உண்மை தானே? கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் செல்லுங்கள். "தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று நாம் சொல்வோமாக. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா சகோதரியே-? உங்களை பார்ப்பதற்கு, நீங்கள் ஒரு ஆரோக்கியமான பெண் என்று நினைக்கிறேன், ஆனால் நீங்கள் ஆரோக்கியமாக இல்லை. உங்களுக்கு இருதய கோளாறு இருக்கிறது. அது சரி தானே-? இன்னொரு காரியம், நீங்கள் அதிகமாக மனதளவில்..?.. மாதவிடாயின் போது, உற்பவ காலத்தின் போது, நீங்கள் மன உளைச்சலாகிவிடுகிறீர்கள்…?.. அது உண்மை தானே. உங்களுக்கு பெண்களுக்கான பிரச்சனையுமிருக்கிறது.......அந்நேரத்தின் போது அதினூடாக செல்கிறீர்கள், அந்த நேரத்தில்..... கீழே ஒருவிதமான வலி, அதிகமாக இடது பக்கத்தில். உங்களை நீங்களே கீழே பிடித்துக் கொண்டு இருப்பதை பார்க்கிறேன்..?... அது உண்மை தானே, அதின் ஒவ்வொரு வார்த்தையும்-? அப்பொழுது தேவனைத் தவிர இந்த உலகத்திலிருக்கும் யாருமே ஒன்றும் அறியாத அந்த இரகசிய இடங்களுக்கு சென்று, உங்களுடைய ஜீவியத்தில் நீங்கள் என்ன செய்தீர்களென்று அதை உங்களுக்கு வெளிப்படுத்தியது எது எது., அது சரிதானே-? இப்பொழுது, என்னை நீங்கள் தேவனுடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறீர்களா-? கர்த்தராகிய இயேசு உங்களை சுகப்படுத்தி விட்டார். நீங்கள் களிகூர்ந்தபடியே உங்கள் வழியில் செல்லலாம். "தேவனுக்கு நன்றி" என்று நாம் கூறுவோமாக. 17. சீமாட்டியே, வாருங்கள். சிறிய சீமாட்டியே எப்படி இருக்கிறீர்கள். என்னை நீங்கள் தேவனுடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறீர்களா, அவருடைய ஊழியக்காரனென்று, பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பெற்றவனென்று மேலும் அது... இந்த இயேசு கிறிஸ்துவின் ஆவி இருந்தால், இருந்தால், அது இயேசு கிறிஸ்துவை பற்றியே சாட்சி கொடுக்கும். அது சரிதானே-? நான் செய்வதற்கு ஒன்றுமே இல்லை; நான் அங்கிருக்கும் அந்த விளக்கை போன்றவன். அது அந்த விளக்கினால் அல்ல; அது அந்த விளக்கில் இருக்கும் மின்சாரத்தால். அது சரிதானே? அது உண்மை. அப்படியானால் இயேசு கிணற்றண்டையில் அந்த ஸ்திரீயிடம் பேசியபோது, அவர் நேரடியாக அவளின் பிரச்சனையிடம் சென்று, அது என்னவென்று அவளிடம் கூறினார். அது சரி தானே-? அது உண்மைதானே-? அப்பொழுது அவள் அதை விசுவாசித்து, சென்று, கூறினால், “நான் செய்தவற்றை ஒரு மனுஷன் சொன்னார், அவரை வந்து பாருங்கள்" என்றால். அது உண்மை தானே. அவள் செய்த எல்லாவற்றையும் அவர் ஒரு போதும் சொல்லவில்லை. அவளின் பிரச்சனை எங்கே இருக்கிறது என்று அவர் கூறினார். இப்பொழுது உங்களுடைய பிரச்சனை என்னவென்று தேவன் எனக்கு வெளிப்படுத்த வேண்டுமானால், அவரை இரட்சகராகவும் உங்கள் மற்றும் ஏற்றுக்கொள்வீர்களா, நான் என்ன கூறுகிறேன் என்றால் அவரை சுகமளிப்பவராகவும் நீங்கள் உங்களுக்கு சுகம் அளிப்பவராக ஏற்றுக்கொள்வீர்களா-? நீங்கள் ஒரு கிறிஸ்தவள். நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா-? ஏற்றுக்கொள்வீர்களா-? உங்களுக்கு பெண்களுக்கான பிரச்சனை இருக்கிறது, அது உண்மைதானே-? அது உண்மை. இப்பொழுது நீங்கள் சென்று நீங்கள் கூறியபடியே செய்யுங்கள், சரியாக இப்பொழுதே அதை நீங்கள் மேற்கொள்வீர்கள். அது ஒரு சீழ்படிந்த கட்டி அங்கே...?... தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. செல்லுங்கள். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. எல்லாம் சரி. வாருங்கள், சீமாட்டியே. 18. உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா, இப்பொழுதே அதை விசுவாசியுங்கள் உங்கள் சகோதரனை அல்ல, இங்கே.... நான் உங்கள் சகோதரன். நான் உங்கள் சகோதரன் மட்டுமே, ஆனால் தேவன் தான் உங்களுடைய இரட்சகர். நீங்கள் பிரசன்னத்தில் இருக்கிறீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா-? விசுவாசிக்கிறீர்களா-? நான் இங்கே இருப்பதால் அல்ல ஆனால் நான் அவரை சுட்டிக் காட்டுவதால். அது சரிதானே-? உங்களுக்கும் எனக்கும் மத்தியில் வரும் போது, ஆம், உங்களுக்கு வயிற்றுக் கோளாறு இருக்கிறது, நிச்சயமாக. அதிலிருந்து அவர் உங்களுக்கு இப்பொழுது சுகமளிப்பார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? நீங்கள் அதை ஏற்றுக்கொள்கிறீர்களா-? சர்வவல்லமை உள்ள தேவனே, இந்த பெண்ணை நீர் சுகமாக்கும்படி, இவள் இங்கிருந்து செல்லும்போது ஆரோக்கியமான நபராக செல்ல வேண்டுமென நான் ஜெபிக்கிறேன், இயேசுவின் நாமத்தினால். ஆமென். அது நரம்பியல் சார்ந்த காரணங்கள்... அது செரிமான பிரச்சனைக்கு காரணமாயிருக்கிறது, உள்ளே புளிப்பாக... அது உண்மை. இப்பொழுது நீங்கள் சென்று பெறலாம், விசு... அதோடு விசுவாசியுங்கள்... உங்களிடம் என்ன பிரச்சனையிருக்கிறது என்றும் நீங்கள் என்ன செய்தீர்களென்றும் அவர் அறிந்திருந்தால், இப்போழுது அதின் விளைவாக என்ன வரப்போகிறது என்பதையும் அவர் அறிவார். அவர் என்னிடம் உண்மையைதான் கூறுகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? அவர் அதை கூறவில்லையென்றால், என்ன நடந்தது என்று அறிந்துக்கொள்ள எப்படி என்னை அனுமதிப்பார்...?.. பாருங்கள்-? அது உண்மையில்லையா-? 19. உங்களுக்கு அந்த பெண்ணை தெரியும். அவளின் ஜீவியத்தை நீங்கள் அறிவீர்கள். சரியாக அந்த சிறு வயது தொடங்கி இதுவரை, அவை யாவும் கட்சிதமாக உண்மையா-? அதின் ஒவ்வொரு வார்த்தையும்-? அது சரிதானே-? ஒரு வேளை, அவள் இந்த இந்த காரியங் களில் சிலவற்றை ஒருபோதும் உங்களிடம் கூறினதே இல்ல, அவள் சரியான பெண் என்று நீங்கள் அறீவீர்களா-? இப்பொழுது, அது அவளோடு இருந்தது போல, இப்பொழுது அது உங்களோடும் இருக்கிறது. போகலாம், கர்த்தர் உங்களோடு இருப்பாராக இப்பொழுது, மகிழ்ச்சியுடன், களிகூர்ந்தபடியே. உங்களுக்கு புரிகிறதா-? நீங்கள்... உங்களையே ஒரு ஒரு நிலைக்குள் இருக்கிறீர்கள். இதற்கு முன்பாகவும் பல முறை உங்களுக்கு ஜெபிக்கப் பட்டிருக்கிறது. பாருங்கள்-? அது உண்மை. கூட்டங்களில். ஆனால் நீங்கள் பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் ஏதோவொன்று, அது சரியாக உங்கள் மேல் இருக்கிறது. அது இப்பொழுதே இருக்கி றது. அது...?... நீங்கள் இங்கே மேடையில் இருக்கும்போது (பாருங்கள்-?), பின்பு நீங்கள் மேடையை விட்டு இறங்குகிறீர்கள். நீங்கள் இங்கே கீழே இருக்கும் போது, காரணமே இல்லாமால் எரிச்சலாகவும், தாழ்வாகவும், படப்படப்பாகவும் மற்றும் மனம் உடைந்தும் இருக்கிறீர்கள். நீங்கள் அது போன்று குறுகிய நேரத்தில் மனமுடைந்து போகிறீர்கள், உங்களுக்கு தெரியும், மனம் சார்ந்த உங்க பாதிப்புகள். உங்களை அப்படி உணர செய்வது எதுவென்று உங்களுக்கு தெரியுமா... நல்லது, எல்லாம் மிக அதிகமான கவலைகளே. இப்பொழுது, பாருங்கள், மேலும் நீங்கள் - மேலும் நீங்கள், பெற்று... முதலாவதாக, “நான் என் சுகமளித்தலை பெற்றுக் கொண்டேன்" என்று நீங்கள் நினைக்கிறீர்கள். பின்பு இங்கிருந்து நீங்கள் கீழே போகும் போது, "ஒ. நான் அதை இழந்து விட்டேன்" என்கிறீர்கள். நிச்சயமாக, ஏனெனில் நீங்கள் இங்கே உங்களையே கீழே விட்டு விடுகிறீர்கள். பாருங்கள்-? இங்கே நீங்கள் தரித்திருங்கள். பாருங்கள்-? சரியாக இங்கே தரித்திருங்கள். அதை சுற்றி ஒரு வளையத்தை வையுங்கள். போய்க்கொண்டே இருங்கள். இப்பொழுது தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில். 20. வாருங்கள், அன்பான சகோதரியே. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்-? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் காண்பதும் கேட்பதுமான இந்த காரியங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடத்திலிருந்து வருகிறது என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? ஆம். ஐயா. நிச்சயமாக ஒரு காரியமிருக்கிறது, நீங்கள் தள்ளாடுவதை பார்க்கும்போது, தாயாரே, தரிசனமோ அல்லது வேறு எதுவும் இல்லாமலே, உங்களுக்கு பக்கவாதம் இருக்கிறது என்பதை நான் அறிகிறேன், நீங்கள் தள்ளாடுகிறீர்கள் அது நரம்பு சார்ந்த பிரச்சனை. நல்லது இப்பொழுது, நீங்களும் நானும் ஒரு நிமிடம் பேசலாம். ஒருவேளை கர்த்தராகிய இயேசு உங்களை பற்றி வேறெதையாவது எனக்கு காட்டுவார் அதாவது... நிச்சயமாக நீங்கள் கண்ணாடி அணிந்திருக்கிறீர்கள். நிச்சயமாக உங்களுக்கு - உங்கள் கண்ணில் உங்களுக்கு ஏதோ பிரச்சனையிருக்கும் எல்லாருக்குமே அது தெரியும். பாருங்கள்-? ஆனால் ஒருவேளை வேறு ஏதோ...ஆம்., ஐயா, உங்களுக்கும் எனக்கும் மத்தியில் இரத்தம் சொட்டுகிறது. அது இரத்த சோகை. அது சரி தானே-? அது உண்மையென்றால் உங்கள் கையை உயர்த்துங்கள். எல்லாம் சரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என் சகோதரியே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை இயேசுவின் நாமத்தால் சுகப்படுத் துவாராக. சகோதரியே உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்தபடியே செல்லுங்கள். 21. சீமாட்டியே, வாருங்கள். சீமாட்டியே, எப்படி இருக்கிறீர்கள். ஒரு நிமிடம் இங்கே வாருங்கள். இல்லை, தாயாரே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே. நீங்கள் எழுந்து நிற்க வேண்டுமென நான் விரும்புகிறேன். தாயாரை நிற்க வையுங்கள். படுக்க வைக்க வேண்டாம். இங்கே என்னை பாருங்கள். என்னை தேவனுடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? நீங்கள் கேட்பது சத்தியம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? நீங்கள் மிகவும் மோசமாக வியாதிப்பட்டிருக்கிறீர்கள், ஆம் தானே-? நீங்கள் அதை செய்வதற்கான காரணம். அது... சாத்தான் உங்களை கொள்ளையாட முயற்சிக்கிறான். நீங்கள் என்னை அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசித்தால், இன்றிரவே உங்களுக்கு விடுதலை. இங்கே வருவதற்காக நீங்கள் மிக நீண்ட தூரம் வந்திருக்கிறீர்கள், ஆம் தானே-? அது சரி. நீங்கள் கீல்வாதத்தால் அல்லது அது போன்ற எதோவொன்றினால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் அது உண்மை... அது உங்கள் முதுகிலிருக்கிறது மேலும் கீழுமாக. அது சரியல்லவா-? இந்த பெண்ணும் முதுகு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். அது சரியல்லவா, சீமாட்டி-? இப்பொழுது, அது சிறுநீரகத்தில் இருக்கிறது, இங்கே, ஆனால் உங்களுக்கோ கீல்வாதம். அது... உங்களுக்கு வேண்டுமா... உங்களுக்கு காச நோயும் இருக்கிறது. உங்களுக்கே அது தெரியுமா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரியுமா-? நீங்கள் அதை அறிவீர்களா-? தாயரே, அதில்... தகப்பனே உங்களுடைய கரங்களை அவளை சுற்றி போடுங்கள். சர்வ வல்லமையுள்ள தேவனே, அமர்ந்திருக்கும் அந்த வயதான தம்பதியை பாரும், கர்த்தாவே, வயதான தகப்பன் தாயை போல. பரிதாபதிற்குரிய தாயார் வியாதியால் வேதனைப்படுகிறாள். சாத்தானே, அவளை விட்டு வெளியே வா. உன் முகத்திரை கிழிக்கப்பட்டது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அந்த பெண்ணை விட்டு போ. அவளை விட்டு வெளியே வா. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சீமாட்டியே. உங்களுடைய சிறுநீரக பிரச்சனை உங்களை விட்டு போய் விட்டது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? தேவனுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற வாஞ்சை உங்களுக்கு இருக்கிறது (பாருங்கள்-?), நீங்கள் இதுவரை நடந்ததை விட இன்னும் நெருங்கி என்று கூறுங்கள். அது சரியல்லவா-? அதற்காக நீங்கள் கடந்த சில நாட்களாக ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள், அது சரியல்லவா-? நீங்கள் அங்கே வரிசையில் நின்றிருந்த போது, அதை நான் கூறிவிடுவேனோ என்று நீங்கள் பயந்தீர்கள் நான் இங்கே வரும் போது, நீங்கள் இங்கே மேலே வரும்போது. இப்பொழுது, நீங்கள் சென்று உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். அது உண்மை தானே-? அது உண்மையே. இப்பொழுது, நீங்கள் ஜெபித்தது, உங்கள் இருதயத்தில் நீங்கள் செய்தது எனக்கு எப்படி தெரியும்-? இப்பொழுது, நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்து செல்லலாம், நீங்கள் ஒரு ஆரோக்கியமான நபராயிருப்பீர்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். 22. அவளுக்கு இருந்த அதே சிறுநீரக பிரச்சனை உங்களுக்குமிருக்கிறது. அது சென்று விட்டது மேடையை விட்டு சென்று விட்டது; நீங்கள் இருவரும் ஒரே நேரத்தில் சுகத்தைப் பெற்றுக் கொண்டீர்கள். நாம் அனைவரும், "தேவனுக்கு ஸ்தோத்திரம்" என்று கூறலாம். விசுவாசியுங்கள். கர்த்தராகிய இயேசுவே இவளை சுகமாக்க வேண்டுமென நான் ஜெபிக்கிறேன் மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் இவளை சுகப்படுத்துவீராக. ஆமென். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள், ஆம் தானே-? நீங்கள் அதை மேற்கொள்ள விரும்புகிறீர்களா-? இப்பொழுதே நீங்கள் தேவனை விசுவாசிக்க வேண்டும் இல்லையேல் உங்களால் அதை ஒரு போதும் மேற்கொள்ள முடியாது. அவர் உங்களை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா. அப்படியானால் எழுந்து நின்று உங்களுடைய சுகமளித்தலை ஏற்றுக்கொள்ளுங்கள், இயேசு கிறிஸ்துவின் நாமத்தால். நீங்கள் போகலாம்-? உங்கள் முழு இருதயத்தோடும் அவரை விசுவாசியுங்கள். தேவனில் விசுவாசமாயிருங்கள். தேவன் அதை வாய்க்கச் செய்வார். ஐயா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். உங்களுக்கு தெரியாது - உங்களுக்கு என்னை தெரியுமா-? எனக்கு உங்களை தெரியாது. என்னை அவருடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? நான் என்ன கூறுகிறேன் என்றால் அதாவது அவர் சபையில் ஏற்படுத்தப் போவதாக கூறிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தீர்க்கதரிசியாய் என்னை விசுவாசிக்கிறீர்களா-? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? நீங்கள் வீட்டிற்கு சென்று முன்பு சாப்பிட்டது போல, ஒரு நல்ல திடமான ஆகாரத்தை மீண்டும் சாப்பிட விரும்புகிறீர்களா-? கர்த்தராகிய இயேசுவின் நாமத்தால் நீங்கள் இதை விசுவாசித்தால், உங்களுக்கு பிடித்ததை போய் சாப்பிடுங்கள். தேவனில் விசுவாசமாயிருங்கள். 23. நீங்கள் தேவனை விசுவாசிக்கிறீர்களா-? உங்களை சுகப்படுத்தும்படி அவர் இங்கே இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? எல்லாம் சரி. நீங்கள் விசுவாசித்தால், தேவன் உதவி செய்தால், உங்களுடைய விசுவாசம் சரியாக இப்பொழுதே அவ்விடம் எழும்பும், அதாவது உங்களுடைய இருதய பிரச்சனை உங்களை விட்டுப் போய் விடும். அதை நீங்கள் மேற்கொள்ள விரும்புகிறீர்களா-? உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். “கர்த்தராகிய இயேசுவே, நான் அதை ஏற்றுக் கொண்டேன்" என்று கூறுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தால் செல்லுங்கள், நீங்கள் நன்றாகி விடுவீர்கள். அல்லேலூயா. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஜனக்கூட்டத்தில் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? இந்த பக்கமாக இருக்கும் யாரேனும், கண்டு விசுவாசியுங்கள். அங்கே அமர்ந்திருக்கும் சீமாட்டியே உங்களை பற்றி என்ன... நிச்சயமாக உங்களுடைய - உங்களுடைய - உங்களுடைய கண்கள் குறுக்காக இருப்பதை நான் கண்டேன். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா-? கூறுங்கள், இந்த பக்கமாக மறுபடியும் பாருங்கள். அதை விட மேலாக. உங்களுக்கு அது தெரியுமா இல்லையா என்று எனக்கு தெரியாது, உங்களுக்கு புற்று நோயுமிருக்கிறது. உங்களுக்கு அது தெரியுமா-? நீங்கள் அதை அறிந்திருந்தால், எழுந்து நின்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் உங்களுடைய சுகமளித்தலை ஏற்றுக் கொள்ளுங்கள். சுகமாவிர்களாக. 24. ஜனக் கூட்டத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்-? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? ஜெபியுங்கள். விசுவாசியுங்கள். நீங்கள் என்ன சீமாட்டியே, உங்களுடைய….. தன் கரத்தை உயர்த்தியிருக்கும் அந்த வயதான பெண். என்னை நீங்கள் தேவனுடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறீர்களா-? ஆம். என்னை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா தேவன். இங்கே சரியாக இப்பொழுது, உங்களுக்கு என்ன பிரச்சனையிருக்கிறது என்று எனக்கு வெளிப்படுத்தினால், நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா-? இதோ, உங்களுக்கு ஆஸ்துமா இருக்கிறது... அது சரியல்லவா-? அது சரிதானே -? உங்களுடைய கரத்தை உயர்த்தி கூறுங்கள்... எல்லாம் சரி. அப்படியானால் எழுந்து நின்று, சுகத்தைப் பெற்றுக் கொள்வீர்களாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தால். உங்களுடைய சுகமளித்தலை ஏற்றுக் கொள்ளுங்கள். சரியாக இப்பொழுது எத்தனை பேர் உங்களுடைய சுகமளித்தலை பெற்றுக் கொள்ள விரும்பி, “என்னுடைய சுகமளித்தலை நான் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்று கூறுகிறீர்கள்-? சகோதரனே மற்றும் சகோதரியே..... சுகமளித்தலை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள், நின்று ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தால், இங்கே இருக்கும் ஒவ்வொரு சந்தேகிக்கும் பிசாசையும் சபித்து அப்புறப்படுத்த வேண்டுமென நான் கேட்கிறேன். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தால். எழுந்து நின்று, உங்களுடைய சுகம் அளித்தலை ஏற்றுக் கொள்ளுங்கள். சுகமாவீர்களாக. அல்லேலூயா. எழுந்து நில்லுங்கள்.. -? *******